வெள்ளி, 7 அக்டோபர், 2011

இந்திய முதல் பெண்கள்

1,இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு - திருமதி மரகதவள்ளி டேவிட்
2,இந்தியாவின் முதல் பெண் ஞானபீடம் விருது பெற்றவர் - திருமதி ஆஷா பூரணதேவி.
3,இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி - செல்வி ரஸியா பேகம்.
4,இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் - திருமதி அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்).
5,இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி - திருமதி உஜ்வாலா பாட்டீல்.
6,இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் - செல்வி காதம்பினி கங்குலி.
7,இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் - திருமதி கன்வால் வர்மா.
8,இந்தியாவின் முதல் பெண் கிரிகட் நட்வர் - திருமதி அஞ்சலி ராஜகோபால் (தமிழ் நாடு)
9,இந்தியாவின் முதல் ஆட்டோ ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண்- திருமதி ஷீலாடோவர்
10,இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் - திருமதி ஹோமய் வ்யாரவல்லா
11,இந்தியாவின் முதல் பெண் சிற்பி - திருமதி மணி நாராயணி
12,இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மபூசன்விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் - திருமதி துர்க்கா பாய்தேஷ்முக்.
13,இந்தியாவின் முதல் பெண் மேயர் (டெல்லி) - திருமதி அருணா ஆசுஃப் அலி
14,உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் - திருமதி ருக்மணி லெட்சுமிபதி.
15,இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் - செல்வி பச்சேந்திரிபால்.
16,இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் - திருமதி அன்னிபெசன்ட் அம்மையார்.
17,இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - திருமதி கேப்டன் லெட்சுமி ஷேகல்
. 18,இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’ அருந்ததி ராய்
19,இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் - திருமதி ரஜினி பண்டிட்.
20,ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி - திருமதி ராணி வேலு நாச்சியார் (மதுரை கோச்சடைப் போர்).
21,இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - திருமதி இந்திரா காந்தி
22,இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - திருமதி பிரதீபா பாட்டீல்
23,இந்தியாவின் முதல் பெண் பாராளுமன்ற சபாநாயகர் - திருமதி மீரா குமார்.
24,இந்தியாவின் முதல் பெண் செஸ் காராண்ட் மாஸ்டர் - செல்வி விஜயலெட்சுமி (சென்னை).
25,இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக்போட்டியில் பதக்கம் வென்றவர் - திருமதி கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா).
26,இந்தியாவின் முதல் பெண் விமானி - திருமதி சுசாமா (ஆந்திரா).
27,இந்தியாவின் முதல் பெண் அதிக நேரம் விமானம் ஒட்டி சாதனை செய்தவர் - திருமதி துர்பா பானர்ஜி (18,500 மணி நேரம்)
28,உலகின் முதல் பெண் விமானியும் இவர் தான்.
29,இந்தியாவின் முதல் பெண் விண்வெளிக்கு சென்றவர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) - செல்வி டாக்டர் கல்பனா சாவ்லா

சனி, 1 அக்டோபர், 2011

பொது அறிவு 2

1. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?
எம்.எஸ்.சி., சித்ரா
2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?
சுரேஷ் கல்மாடி
3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அகஸ்டிகோ போபியா
4. உலகின் சிறிய கடல் எது?
ஆர்டிக் கடல்
5.எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது?
கூடைப்பந்து
6. சிஸ்டின் சேப்பல் ஓவியத்தை வரைந்தவர் யார்?
மைக்கல் ஏன்ஜலோ
7. ஒசாமா பின்லேடன் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்?
அல் கொய்தா
8, தனது வாயில் 135 பல்வரிசைகளில் மொத்தமாக 14175 பற்களைக் கொண்டுள்ளது எது?
நத்தைகள்
9. உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது?
பிரேசில்
10. லசித் மலிங்கா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
கிரிக்கெட்
11. சீனாவின் தலைநகரம் எது?
பீஜிங்
12. இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?
பிரம்மபுத்ரா
13. பாரதியார் பிறந்த ஊர் எது?
எட்டயபுரம்
14. கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது?
நரி
15. தமிழகத்தின் பரப்பளவு?
130,058 சதுர கி.மீ
.