திங்கள், 16 ஏப்ரல், 2018

ஆப்ரகாம் லிங்கனும் கென்னடியும்...



ஆப்ரகாம் லிங்கனும் கென்னடியும்...

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கனுக்கும் ஜான் எப் கென்னடிக்கும் ஏகப்பட்ட ஓற்றுமை உண்டு. அவை நம்பமுடியாத வகையில் இருப்பதுதான் ஆச்சரியம்.
இருவரும் ஜனாதிபதிகள் ஆவதற்கு முன்பு காங்கிரஸ் மகாசபைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டனர். லிங்கன் தேர்வானது 1846. கென்னடி தேர்வானது 1946. லிங்கன் துணைத்தலைவருக்கான தேர்தலில் நின்று தோற்றது 1856-ல், கென்னடி துணைத்தலைவருக்கான தேர்தலில் நின்று தோற்றது 1956. லிங்கனைத் தோற்கடித்த ஸ்டீபன் டக்லஸ் பிறந்தது 1813. கென்னடியை தோற்கடித்த ரிச்சர்ட்ஸ் நிக்சன் பிறந்தது 1913. லிங்கன் ஜனாதிபதியானது 1860, கென்னடி ஜனாதிபதியானது 1960. லிங்கன் கென்னடி இருவருமே சிவில் விஷயங்களில் தொடர்பு கொண்டவர்கள். லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி, கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன். இருவரின் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வசிக்கும் போது தங்களது குழந்தைகளை தொலைத்தனர்.
இருவருமே துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டு இறந்தார்கள். இருவருமே இறந்தது வெள்ளிக்கிழமை. இருவரையும் கொன்றவர்கள் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இருவரையும் தேர்தலில் தோற்கடித்தவர்களும் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
இவர்களுடைய துணைத் தலைவர்களாக இருந்தவர்கள் பெயர்களும் ஜான்சன்தான். லிங்கனின் துணைத்தலைவரின் பெயர் ஆண்ட்ரூ ஜான்சன், இவர் பொறுப்பில் இருந்தது 1847 ல்,. லிங்கனை வெற்றி கொண்ட இவர் பிறந்தது 1808 ல்,.அதே போல் கென்னடியின் துணைத்தலைவரின் பெயர் லிண்டன் ஜான்சன். இவர் பொறுப்பில் இருந்தது 1947 ல்,.கென்னடியை வென்ற இவர் பிறந்தது 1908 ல்,.
லிங்கனைக் கொன்ற ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1838. கென்னடியைக் கொன்ற லே ஹார்வி ஓஸ்வால்ட் பிறந்தது 1938. கொலையாளிகள் இருவருமே மூன்று பெயர்களை ஓன்றாக கொண்டவர்கள். இருவருடைய பெயரிலும் மொத்தம் 15 ஆங்கில எழுத்துக்கள் இருந்தன.
லிங்கன் கொல்லப்பட்டது போர்ட் என்ற பெயர் கொண்ட தியேட்டரில்,. கென்னடி கொல்லப்பட்டது போர்ட் நிறுவனம் தயாரித்த காரில். லிங்கனைக் கொன்ற ஜான், தியேட்டரில் இருந்து தப்பியோடி கிடங்கில் பிடிபட்டான். கென்னடியை கொன்ற ஓஸ்வால்ட், கிடங்கில் இருந்து தப்பியோடி தியேட்டரில் பிடிபட்டான். இரண்டு கொலையாளிகளும் தண்டனை அனுபவிக்கும் முன்பே கொல்லப்பட்டனர்.
இத்தனை சம்பவங்களும் இருவரது வாழ்விலும் நூறாண்டு இடைவெளியல் சரியாக அதே ஆண்டுகளில் நடந்திருக்கிறது

ராமானுஜன் 1729 நம்பர்



நம்பர் 1729 , இந்த நம்பருக்கு ராமானுஜன் நம்பர் பெயர்.
ஏன் ? மனதுக்கு ரம்யமான விஷயம் . ரசியுங்கள் .

Taxi No. HR 1729
டாக்ஸி எண்.ஹரா 1729 

ஸ்ரீனிவாஸ ஐயங்கார் ராமானுஜன் என்ற மாபெரும் கணித மேதையின் மேதமையின் ஒரு சிறு பகுதிதான் இந்த தலைப்பு.ராமானுஜர் ஒரு முறை லண்டனில் மருத்துவ மனையில் இருந்த போது அவரை பார்க்கச்சென்ற ஹார்டி என்ற ஆராய்ச்சியாளர், எப்படி வந்தீர்கள் என கேட்க,டாக்சியில் வந்தேன் எனவும்,டாக்சி நம்பர் என்ன என்று கேட்க தான் HR 1729 என்ற டாக்ஸ்யில் வந்ததாகவும், இந்த டாக்ஸி எண்ணில் பெரிய சுவாரசியம் எதுவும் இருப்பதாக தெரியவில்லயே என்று பேச்சு வாக்கில் சொல்ல, உடனே ராமானுஜர், இல்லை இல்லை 1729 என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த எண் என்று கூறி விட்டு உடனே அதற்க்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

அதாவது 1729 என்ற எண்தான் இரு வழிகளில் மூன்றை அடுக்காக கொண்ட இரு எண்களின் கூட்டுதொகையில் வரும் மிக சிறய எண் (natural நம்பர் ) ஆகும்.மேலும் இதன் இரண்டு சிறப்புகளையும் உடனே படுக்கையில் இருந்தவாரே விளக்கியுள்ளார்.

1729=1*3 + 12*3 =9*3 +10*3
அதாவது 1 cube + 12 cube= 9cube + 10cube=1729

சற்று நினைத்து பாருங்கள், எந்த அளவிற்கு கணிதத்திலேயே மூழ்கி இருந்தால் உடனே இவ்வாறு பதில் அளிக்க முடியும்.இந்த 1729 என்ற எண்தான் ராமானுஜன் நம்பர் (Ramanujan Number) என்று, அவரை கௌரவிக்க வைக்கப்பட்டது
 

ஓலிம்பிக் நடைபெற்ற இடமும் ஆண்டும்

1,(ஏதென்ஸ்)கிரீஸ்-1896.
2,(பாரீஸ்)பிரான்ஸ்-1900,
3,(செயிண்ட் லூயிஸ்)அமெரிக்கா-1904,
4,(லண்டன்)இங்கிலாந்து-1908,
5,(ஸ்டாக் ஹோம்)சுவீடன்-1912.
6,(பெர்லின்)நடைபெறவில்லை-1916.
7,(ஆண்ட்வெர்ப்)பெல்ஜியம்-1920.
8,(பாரீஸ்)பிரான்ஸ்-1924.
9,(ஆம்ஸ்டர்டாம்)நெதர்லாந்து-1928.
10,(லாஸ் ஏஞ்சல்ஸ்)அமெரிக்கா-1932.
11,(பெர்லின்)ஜெர்மனி-1936.
12,(டோக்கியா)நடைபெறவில்லை-1940.
13,(லண்டன்)நடைபெறவில்லை-1944.
14,(லண்டன்)இங்கிலாந்து-1948.
15,(ஹெல்சின்கி)பின்லாந்து-1952.
16,(மெல்போர்ன்)ஆஸ்திரேலியா-1956.
17,(ரோம்)இத்தாலி-1960.
18,(டோக்கியா)ஜப்பான்-1964.
19,(மெக்ஸிகோ)மெக்ஸிகோ நகர்-1968.
20,(மியூனிச்)ஜெர்மனி-1972.
21,(மாண்ட்ரியல்)கனடா-1976.
22,(மாஸ்கோ)ரஷ்யா-1980.
23,(லாஸ் ஏஞ்சல்ஸ்)அமெரிக்கா-1984.
24,(சியோல்)தென் கொரியா-1988.
25,(பார்சிலோனா)ஸ்பெயின்-1992.
26,(அட்லாண்டா)அமெரிக்கா-1996.
27,(சிட்னி)ஆஸ்திரேலியா-2000.
28,ஏதென்ஸ்-2004.
29,பெல்ஜிங்-2008.
30,லண்டன்-2012.
31,(தியோஜெனரோ)பிரேசில்-2016.