திங்கள், 16 ஏப்ரல், 2018

ராமானுஜன் 1729 நம்பர்



நம்பர் 1729 , இந்த நம்பருக்கு ராமானுஜன் நம்பர் பெயர்.
ஏன் ? மனதுக்கு ரம்யமான விஷயம் . ரசியுங்கள் .

Taxi No. HR 1729
டாக்ஸி எண்.ஹரா 1729 

ஸ்ரீனிவாஸ ஐயங்கார் ராமானுஜன் என்ற மாபெரும் கணித மேதையின் மேதமையின் ஒரு சிறு பகுதிதான் இந்த தலைப்பு.ராமானுஜர் ஒரு முறை லண்டனில் மருத்துவ மனையில் இருந்த போது அவரை பார்க்கச்சென்ற ஹார்டி என்ற ஆராய்ச்சியாளர், எப்படி வந்தீர்கள் என கேட்க,டாக்சியில் வந்தேன் எனவும்,டாக்சி நம்பர் என்ன என்று கேட்க தான் HR 1729 என்ற டாக்ஸ்யில் வந்ததாகவும், இந்த டாக்ஸி எண்ணில் பெரிய சுவாரசியம் எதுவும் இருப்பதாக தெரியவில்லயே என்று பேச்சு வாக்கில் சொல்ல, உடனே ராமானுஜர், இல்லை இல்லை 1729 என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த எண் என்று கூறி விட்டு உடனே அதற்க்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

அதாவது 1729 என்ற எண்தான் இரு வழிகளில் மூன்றை அடுக்காக கொண்ட இரு எண்களின் கூட்டுதொகையில் வரும் மிக சிறய எண் (natural நம்பர் ) ஆகும்.மேலும் இதன் இரண்டு சிறப்புகளையும் உடனே படுக்கையில் இருந்தவாரே விளக்கியுள்ளார்.

1729=1*3 + 12*3 =9*3 +10*3
அதாவது 1 cube + 12 cube= 9cube + 10cube=1729

சற்று நினைத்து பாருங்கள், எந்த அளவிற்கு கணிதத்திலேயே மூழ்கி இருந்தால் உடனே இவ்வாறு பதில் அளிக்க முடியும்.இந்த 1729 என்ற எண்தான் ராமானுஜன் நம்பர் (Ramanujan Number) என்று, அவரை கௌரவிக்க வைக்கப்பட்டது
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக