திங்கள், 16 ஏப்ரல், 2018

ஆப்ரகாம் லிங்கனும் கென்னடியும்...



ஆப்ரகாம் லிங்கனும் கென்னடியும்...

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கனுக்கும் ஜான் எப் கென்னடிக்கும் ஏகப்பட்ட ஓற்றுமை உண்டு. அவை நம்பமுடியாத வகையில் இருப்பதுதான் ஆச்சரியம்.
இருவரும் ஜனாதிபதிகள் ஆவதற்கு முன்பு காங்கிரஸ் மகாசபைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டனர். லிங்கன் தேர்வானது 1846. கென்னடி தேர்வானது 1946. லிங்கன் துணைத்தலைவருக்கான தேர்தலில் நின்று தோற்றது 1856-ல், கென்னடி துணைத்தலைவருக்கான தேர்தலில் நின்று தோற்றது 1956. லிங்கனைத் தோற்கடித்த ஸ்டீபன் டக்லஸ் பிறந்தது 1813. கென்னடியை தோற்கடித்த ரிச்சர்ட்ஸ் நிக்சன் பிறந்தது 1913. லிங்கன் ஜனாதிபதியானது 1860, கென்னடி ஜனாதிபதியானது 1960. லிங்கன் கென்னடி இருவருமே சிவில் விஷயங்களில் தொடர்பு கொண்டவர்கள். லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி, கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன். இருவரின் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வசிக்கும் போது தங்களது குழந்தைகளை தொலைத்தனர்.
இருவருமே துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டு இறந்தார்கள். இருவருமே இறந்தது வெள்ளிக்கிழமை. இருவரையும் கொன்றவர்கள் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இருவரையும் தேர்தலில் தோற்கடித்தவர்களும் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
இவர்களுடைய துணைத் தலைவர்களாக இருந்தவர்கள் பெயர்களும் ஜான்சன்தான். லிங்கனின் துணைத்தலைவரின் பெயர் ஆண்ட்ரூ ஜான்சன், இவர் பொறுப்பில் இருந்தது 1847 ல்,. லிங்கனை வெற்றி கொண்ட இவர் பிறந்தது 1808 ல்,.அதே போல் கென்னடியின் துணைத்தலைவரின் பெயர் லிண்டன் ஜான்சன். இவர் பொறுப்பில் இருந்தது 1947 ல்,.கென்னடியை வென்ற இவர் பிறந்தது 1908 ல்,.
லிங்கனைக் கொன்ற ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1838. கென்னடியைக் கொன்ற லே ஹார்வி ஓஸ்வால்ட் பிறந்தது 1938. கொலையாளிகள் இருவருமே மூன்று பெயர்களை ஓன்றாக கொண்டவர்கள். இருவருடைய பெயரிலும் மொத்தம் 15 ஆங்கில எழுத்துக்கள் இருந்தன.
லிங்கன் கொல்லப்பட்டது போர்ட் என்ற பெயர் கொண்ட தியேட்டரில்,. கென்னடி கொல்லப்பட்டது போர்ட் நிறுவனம் தயாரித்த காரில். லிங்கனைக் கொன்ற ஜான், தியேட்டரில் இருந்து தப்பியோடி கிடங்கில் பிடிபட்டான். கென்னடியை கொன்ற ஓஸ்வால்ட், கிடங்கில் இருந்து தப்பியோடி தியேட்டரில் பிடிபட்டான். இரண்டு கொலையாளிகளும் தண்டனை அனுபவிக்கும் முன்பே கொல்லப்பட்டனர்.
இத்தனை சம்பவங்களும் இருவரது வாழ்விலும் நூறாண்டு இடைவெளியல் சரியாக அதே ஆண்டுகளில் நடந்திருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக